I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்?, ஜூன் 1ம் தேதி டில்லியில் ஆலோசனை கூட்டம்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் யார் என்பது குறித்து ஜூன் 1-ம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 1-ம் தேதி I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், I.N.D.I.A. கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் நிலையில், யாரை பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் சார்பில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக I.N.D.I.A. கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *