85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

அரசியல் அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் பொருளாதாரம்

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting Oceans, One Maritime Vision) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மும்பையில் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 600 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகவுள்ளன.மேலும், மாநாட்டில் மராட்டிய, குஜராத், ஒடிசா, கோவா மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவின் நீண்ட கடற்கரை மற்றும் கடல் வர்த்தக பாதைகள் காரணமாக, கடல்சார் துறை தேசிய பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் மிக அவசியமானது.இந்த மாநாடு இந்தியாவின் “Make in India”, ப்ளூ எகானமி (Blue Economy), மற்றும் பசுமை தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த நோக்கங்களை முன்னிறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *