முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. ஜெயந்திநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ,மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரத்திற்க்காக கடற்கரைக்கு எழுந்தருள்வார்.அதனை தொடர்ந்து, கஜ முகம், சிங்க முகம் மற்றும் சூரபத்மனை முருகன் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

