கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம்

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுச் சூழல் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதில் ஏவுகணை குறுகிய தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. ஆரம்பத்தில் ஏவுகணை ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குள் பெரிய இலக்கை நோக்கி சென்றது. பிறகு இதை ஏவிய விமானி சிறிய மறைக்கப்பட்ட இலக்கை தேர்ந்தெடுத்தார். அந்த இலக்கையும் மிக துல்லியமாக தாக்கியது.பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்த ஏவுகணையின் பரிசோதனை நேற்று முன்தினம் நடந்தது. இந்த சோதனையில் ஏவுகணையின் மேன்-இன்-லூப் அம்சத்தை நிரூபித்துள்ளன. மேலும் ஏவுகணை அதன் அதிகபட்ச வரம்பில் ஒரு சிறிய கப்பல் இலக்கை நேரடியாக தாக்கியுள்ளன. ஏவிய பிறகும், இலக்கை மாற்றும் வசதி கொண்ட இந்த ஏவுகணையில் இருவழி டேட்டாலின்க் சிஸ்டம் உள்ளது. சோதனையில் இந்த ஏவுகணை அதன் திட்டமிட்ட நோக்கங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது. இந்த சோதனைக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *