ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட வேண்டும்; மத்திய அரசு உத்தரவு

இந்திய வணிகம் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளம்பர செய்திகள் விளம்பர செய்திகள் விளம்பரங்கள்

ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் நிறுவனங்கள் 10 நிமிட டெலிவரி திட்டத்தை மத்திய அரசு உத்தரவின்படி ரத்து செய்து, சமூக ஊடகங்களில் உறுதிமொழியை நீக்கின.
ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் வணிகம் போட்டி நிறைந்ததாக மாறியதால், வாடிக்கையாளர்களை கவர தனியார் நிறுவனங்கள் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதில், ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் 10 நிமிடத்தில் விநியோகம் செய்யப்படும் என்ற திட்டம் ஊழியர்களை பெரும் நெருக்கடிக்கு தள்ளியது.
குறிப்பாக, வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
னவே, 10 நிமிடத்தில் விநியோகம் என்ற திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் டெலிவரி நிறுவன ஊழியர்கள் கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஸ்விக்கி, சோமேட்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
இதில், 10 நிமிடத்தில் விநியோகம் செய்யப்படும் என்ற திட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக் கொண்ட நிறுவனங்கள், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து 10 நிமிடத்தில் டெலிவரி என்ற உறுதிமொழியை நீக்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *