சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் சீனா செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் போருக்குப் பிறகு சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியதற்காக புடினுக்கு ICC கைது வாரண்ட் பிறப்பித்து என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் ஜின்பிங் – புடின் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் ஆழப்படுத்த ஜின்பிங் வந்ததாக ஊடகங்கள் வர்ணித்துள்ளன. உக்ரைனுக்கான சீனாவின் அமைதித் திட்டமானது புடின் மற்றும் ஜின்பிங் இடையேயான பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போருக்குப் பிறகு ஒட்டுமொத்த மேற்கு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியபோது, ​​ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்று. இந்த மாதம் மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு ஜி ஜின்பிங்கின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published.