அமெரிக்க செனட் தேர்தலில் களமிறங்கும் இந்திய வம்சாவளி சிவா அய்யாதுரை! எட் மார்கியுடன் நேரடி போட்டி

அமெரிக்கா அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் தேர்தல் செய்திகள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3, 2026 அன்று நடைபெறவுள்ள செனட் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சிவா அய்யாதுரை மசாசூசெட்ஸ் மாகாணத்தில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய செனட்டர் எட் மார்கி உள்ளிட்ட வேட்பாளர்களை எதிர்கொள்கிறார். அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சுயேச்சையாகப் போட்டியிடுவது இவரது தேர்தல் முயற்சியின் முக்கிய அம்சமாக உள்ளது.
டாக்டர் சிவா அய்யாதுரை, மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான எம்.ஐ.டி.யில் (MIT) நான்கு பட்டங்களைப் பெற்றவர். கணினித் தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் கல்வி பயின்றுள்ள இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் தொழில்முனைவுத் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.இவரது தேர்தல் பிரசாரத்தில் வரிக் குறைப்பு, அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, அரசியல் தலைவர்களின் பதவிக்கால வரம்பு, டிஜிட்டல் தனியுரிமை உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தேர்தல் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பான கருத்துகளையும் முன்வைத்து வருகிறார். இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனநாயகக் கட்சி செனட்டர் எட் மார்கி, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் டீட்டன், சோஷலிசம் அண்ட் லிபரேஷன் கட்சியைச் சேர்ந்த ஜோ டேச் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சிவா அய்யாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *