3 மாதங்கள் சூரிய ஒளியே படாத இடம்; இத்தாலி நாட்டில் ஓர் அதிசய கிராமம்

உலகம் ஐரோப்பா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

இத்தாலி நாட்டில் உள்ள விக்னெல்லா கிராமம்தான் இந்த சாதனைக்கு சொந்தமான கிராமம். இது இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து இடையே உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் மக்கள் விக்னெல்லாவில் குடியேற ஆரம்பித்தனர். இங்கு நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதிவரையில் சூரிய ஒளி மிக மிக குறைவாகவே இருக்கும்.
இந்த நாட்களில் விக்னெல்லா கிராமத்தில் இருந்தால் ஏதோ அண்டார்டிகாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கிராமத்தில் 200 பேர் வசிக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக, சூரியன் மறைந்து, இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றும் செயல்முறை இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி திரட்டப்பட்டு, பின்னர் ஊர் எதிரே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கியது. நவம்பர் 2006ல், கிராம மக்கள் மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். அதன் எடை 1.1 டன். இது 1100 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டது.
குறைந்த அளவு சூரிய ஒளி உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அது ஒளியை எதிரொளிக்கும். அதன் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு விக்னெல்லா கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறத் தொடங்கியது. இப்பிரச்னைக்கு அங்குள்ள மக்கள் தீர்வு கண்ட விதம், உலகம் முழுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *