இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள் பொருளாதாரம் ரஷ்யா

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் 2023 முதல், இந்தியர்களுக்கு இ-விசா மூலம் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது, மேலும் இந்த இ-விசாக்கள் விண்ணப்பித்த 4 நாள்களுக்குள் வழங்கப்படுகின்றன. இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு இ-விசா மூலம் பயணம் செய்ய ரஷியா அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 9,500 இந்தியர்கள் இ-விசா மூலம் ரஷியாவுக்கு பயணம் செய்துள்ளனர்.ரஷியாவில் நுழைவதற்கும், தங்குவதற்கும் இந்தியர்கள் அந்நாட்டின் தூதரகத்தில் விசா பெறும் நடைமுறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த செயல்முறை மிகவும் நீண்ட காலமாக உள்ளது.பல இந்தியர்கள் வணிக மற்றும் அலுவல் நோக்கங்களுக்காக ரஷியாவுக்கு பயணம் செய்கிறார்கள். 2023ஆம் ஆண்டில் மட்டும் 60,000 பேர் பயணித்துள்ளனர், இது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 26 சதவிகிதம் அதிகமாகும்.தற்போது, சீனா மற்றும் ஈரான் நாட்டினருக்கு விசா இல்லாமல் ரஷியாவில் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இந்தியாவுக்கும் இதனை விரிவுபடுத்த முன்வந்துள்ளது ரஷ்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *