ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் காற்று தர குறியீட்டு (AQI) பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் காற்று மாசு அதிகமான நகரங்களும், குறைவான நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.இதில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹரியானா, உத்தரபிரதேச நகரங்கள் பெரும்பாலும் மாசு அதிகம் கொண்டவையாக உள்ளன.முதலிடத்தில் உள்ள தருஹேராவின் காற்று தர குறியீடு 123, அதன்பின் ரோஹ்தக், காசியாபாத், நொய்டா, பல்லப்கர், டெல்லி, பிவாடி, கிரேட்டர் நொய்டா, ஹாபூர், குர்கான் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.மொத்தம் 249 நகரங்களில் 212 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.மாறாக, சுத்தமான காற்று கொண்ட நகரங்களில் மேகாலயாவின் ஷில்லாங் முதலிடம் பிடித்துள்ளது — அதன் AQI 10 ஆகும்.தமிழ்நாட்டிலிருந்து 3 நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன: நாகப்பட்டினம் – 5வது இடம் (AQI: 15)திருநெல்வேலி – 9வது இடம் (AQI: 17)பெருந்துறை – 10வது இடம் (AQI: 17)

