நடிகர் விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து தீர்மானம்; சிறப்பு பொதுக்குழுவில் முடிவு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.
இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் இன்று காலை தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ப 2,00க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தவெக முதல்வர் வேட்பாளராக விஜயை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவகளையும் விஜய் எடுப்பார் என்ற அதிகாரத்தை கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தவெக சிறப்பு பெதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்
கரூரில் கூட்ட நெரசிலில் உயிரிழந்த உறவுகளுக்கு இரங்கல்
பெண்கள் பாதுகாப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர்களின் ஜனநாயகம் கடமையான வாக்குரிமையை பறிக்கும் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறுத்த கோரிக்கை
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் உரிய நேரத்தில், கொள்முதல் செய்யாமல் நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து, மூட்டையிலேயே முளைத்து வீணாகும் நிலைக்குக் காரணமான, விவசாயிகள் விரோத ஆட்சியாளர்களுக்குக் கண்டனம்.
வடகிழக்குப் பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட ராம்சர் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்டத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தித் தீர்மானம்
மக்கள் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கழகத் தலைவருக்கும் அவரைக் காண வரும் பொதுமக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கழகத்தின் மீதும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளைப் பரப்பும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாகச் செயல்படுபவர்களுக்குக் கண்டனம்.
தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள், அவற்றின் மூலம் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
தமிழ்நாட்டில் ஜனநாயக அடிப்படையில் பொதுப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்து, அவர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வெற்று விளம்பர மாடல் அரசுக்குக் கண்டனம்.
கூட்டணி நிலைப்பாட்டில் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *