அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி மீண்டும் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.தோனி தற்போது ஓய்வு பெறும் எந்தத் திட்டமும் இல்லை என்றும், “அவர் தானாகவே முடிவு செய்வார்; ஆனால் இப்போது அவர் இன்னும் ஆட்டத்துக்கு தயாராக உள்ளார்” என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.தோனி கடந்த சில சீசன்களில் முழு உடல் நலத்துடன் விளையாட முடியாமல் இருந்தாலும், ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் களமிறங்கப் போவதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, 2026 ஐபிஎல் லீக்கிற்கான மினி ஏலத்திற்கும், புதிய அணியமைப்பிற்கும் சிஎஸ்கே தயாராகி வருகிறது.

