அமெரிக்காவில் நடந்த திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி பட்டம் வென்றார்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் நடந்த ‘திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி Ms.International World People’s Choice Winner 2022 என்ற பட்டம் வென்றார்.
கோவையில் பிறந்த இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என இவருக்கு பல திறமைகள் கொண்டவர்.
கடந்த ஆண்டு அமெரிக்க -இந்திய கூட்டு முயற்சி காரணமாக நடந்த ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், பிளாரன்ஸ் ஹெலன் நளினியும் ஒருவர். மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தையும் ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தையும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார்.

Leave a Reply

Your email address will not be published.