துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 1700 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 மேல் உயர்ந்துள்ளது. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் நர்டஹி நகர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயுபைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிரியாவிலும் நிலநடுக்கத்தால் சுமார் 1000 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இத்தாலி சுனாமி பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.