ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை கூறிய முன்னாள் ஊழியர் ‘சடலமாக’ மீட்பு.

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

Open AI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் அந்நிறுவனத்தின் தவறான செயல்களை வெளிப்படுத்திய 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோ மருத்துவ பரிசோதகர் அலுவலகம் தற்கொலை காரணமாகவே அவரது உயிர் பிரிந்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. சாட் ஜிபிடிக்கு பயிற்சி அளிக்க உரிமம் பெற்ற தரவுகளை ஓபன் ஏஐ பயன்படுத்தியதற்காக அவர் அமெரிக்க பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டினார். பல எழுத்தாளர்கள், கணினி நிரலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களின் உழைப்பை ஓபன் ஏஐ அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு பிறகு, ஓபன் ஏஐக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடுமையான விதிமுறைகள் இல்லாத நிலையில், மனித குலத்திற்கு AI கொண்டு வரக்கூடிய ஆபத்திகள் குறித்து பாலாஜி நியூ யார்க் டைம்ஸ் பேட்டியில் தனது கவலைகளை வெளிப்படுத்தினார்.இந்த தொழில்நுட்பம் சமூகத்திற்கு நன்மை அளிப்பதைவிட, அதிகமான தீமைகளை உருவாக்கும் என அவர் கூறினார். இந்நிலையில், பாலாஜியின் மர்மமான மரணம் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. அவர் வெளியிட்ட கடைசி எக்ஸ் பதிவில், ஓபன் ஏஐ மட்டுமல்லாமல், முழுமையான ஏஐ வளர்ச்சியைக் குறித்து அவர் கவலை தெரிவித்திருந்தார். உலகில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் சேவைகளை ஏஐ மூலம் மேம்படுத்தியதாக விளம்பரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏஐ, தற்போது பெரும் வணிக தேவையாக மாறியுள்ள நிலையில், பாலாஜி மரணம் போலீசார்களின் தற்கொலை எனக் கூறப்பட்டாலும், இதற்கான மர்மங்கள் இன்னும் பலரால் சந்தேகிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *