பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக 942 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், கடற்கரை ஓரங்களில் பல உயிரினங்கள் வலிப்பால் துடிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தொற்று பாதிப்பு பரவாது இருக்க பறவை காய்ச்சலால் இறந்த கடல் உயிரினங்களை புதைக்கவும் எரிக்கவும் செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *