ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று மே 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெளியேற்றியது. நேற்று நடந்த சுவாரஸ்யமான குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இரண்டு அணிகளின் எந்த அணி வென்றாலும் அந்த அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

