ஐபிஎல் 2024: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்த்தா அணி; ஐதராபாத் அணியின் கனவு தகர்ந்தது

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

இன்று நடந்த 2024 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 113 ரன்களில் சுருட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இரண்டாவதாக பேட் செய்த கொல்கத்தா அணி, 114 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் 2024 சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் இறுதிப்போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் முதல் இன்னிங்ஸே ஒரு தரப்பாக அமைந்துவிட்டது. ஆட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க், ராணா, அரோரா, ரஸல் ஆதிக்கம் செலுத்தினர்.
ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன் குறைந்தபட்ச ஸ்கோர் 125 ஆக இருந்தது, அதைவிட மோசமாக சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களில் சுருண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *