இஸ்ரேலுக்கு எதிராக இரான் தாக்குதல்

அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி வட அமெரிக்கா

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தகவலின்படி, இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், இரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரான் பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டால், மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளுவோம் என இரான் மிரட்டியுள்ளது. இது இரான் புரட்சிகர காவல் படையின் முதல் தாக்குதல் என நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கமிட்டி தலைவர் இப்ராகிம் அஸிஸி குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மீண்டும் தவறு செய்தால், அடுத்த கட்டத்தில் நடைபெறும் தாக்குதல் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிலைமையை கவனித்து வருவதாகவும், மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசனை நடத்துவதாகவும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க குடிமக்களை உடனே வெளியேறுமாறு எந்தவொரு அறிவுறுத்தல்களும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *