சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க விண்வெளிக்கு புறப்பட்டது SPACEX விண்கலம்

உலகம் சிறப்பு முதன்மை செய்தி ரஷ்யா வட அமெரிக்கா விண்வெளி சார்ந்தவை

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரையும் பூமிக்கு திரும்ப அழைத்துவரும் நோக்கில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்காக இரண்டு காலி இருக்கைகள் கொண்ட டிராகன் காப்ஸ்யூல், புளோரிடாவின் கேப் கனாவெரலில் இருந்து கடந்த செப்டெம்பர் 28 ஆம் தேதி ஏவப்பட்டது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறினால் எட்டே நாளில் பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய நிலை உருவானது. விண்வெளி வீரர்கள் யாரும் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலம் ஏற்கனவே பூமிக்கு திரும்பிவிட்டது. தற்போது நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ், புதிய ஆய்வுக் கருவிகள் மற்றும் பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்கிறார்கள். அவர்கள் பிப்ரவரி மாதத்தில் சுனிதா மற்றும் புட்ச் ஆகியோருடன் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராகன் விண்கலத்தை செப்டம்பர் 26 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது, ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலேன் சூறாவளியின் காரணமாக அதன் புறப்பாடு தாமதமாகியது. ஈலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களுடன் விண்கலங்களை அனுப்புகிறது.இரண்டு விண்வெளி வீரர்களை மீட்க அனுப்பப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைந்துள்ளது. இந்திய நேரப்படி செப்டம்பர் 30 அதிகாலை 3 மணிக்கு இந்த இணைப்பு நிகழ்ந்தது. நாசா மற்றும் ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மூன்று இருக்கைகள் கொண்ட ரஷ்ய சோயுஸ் விண்கலத்தின் ஒவ்வொரு விண்வெளி பயணத்திலும் ஒரு நாசா விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைக்கப்படுவார். மேலும், நான்கு இருக்கைகள் கொண்ட டிராகன் விண்கலத்தில் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *