இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பாகிஸ்தான் மற்றவை முதன்மை செய்தி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று மசூதிக்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி பெரும் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 170-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *