போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கடுமையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில், “சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மதித்து, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.காஸாவின் தெற்கு பகுதியான ரஃபாவில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை வெடித்தது. இதில் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இஸ்ரேல் இரவு முழுவதும் காஸா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.இதனால் பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்தனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், ரமல்லாவில் சட்டவிரோதமாக குடியேற்றம் செய்துள்ள இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள், பாலஸ்தீனர்களின் வாகனங்களுக்கும் வீடுகளுக்கும் தீவைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலியர் தாக்குதல்களில் 1,073 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.அத்துடன், சர்வதேச சமூகத்திடம் உடனடி தலையீடு செய்யவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது
 
	

 
						 
						