சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: “அமெரிக்கவிற்கு அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் சீன அதிபர் ஸி ஜின் பிங்குடன் தற்போது சிறந்த புரிதல் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகள் புதிய நிலைக்கு செல்லும்” என தெரிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்விடியா (NVIDIA) உருவாக்கிய ஏஐ சிப்புகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படும். அதே நேரத்தில், சீனா அமெரிக்காவுக்கு மின்னணு உற்பத்திக்குத் தேவையான அரிய உலோகங்கள் (Rare Earth Elements) வழங்க ஒப்பந்தமாகியுள்ளது.இந்த நடவடிக்கை, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் நிலவும் போட்டி சூழலில் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.சிறப்பு வல்லுநர்கள் கூறுவதாவது, இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சீனாவின் வளர்ச்சிக்கு வித்திடும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு முக்கியமான மூலப்பொருட்களின் கிடைப்பை உறுதி செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

