கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலுக்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே முழுமையாக காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கூட்டத்திற்காக தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே, பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக தவெகவினர் கூறும் குற்றச்சாட்டு உண்மையல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலுக்கு காரணமான பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

