ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், உக்ரைனுடன் நடைபெற்று வரும் போர் குறித்து அவர் பேசினார். ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களும் ரஷ்யாவின் வெற்றியில் நம்பிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் புடின் கூறினார். ரஷ்யா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் ராணுவ வீரர்களை நினைத்து கவலைப்படுகிறோம் என்றும், அவர்களின் பங்களிப்பை அரசு மதிக்கிறது என்றும் அவர் கூறினார்.இதற்கிடையில், உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும் என்று புடின் கூறியுள்ள கருத்து, போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தடையாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

