திடீரென பிரபலமான குணா குகை; ஆபத்து நிறைந்த மலைகள் கொண்ட கொடைக்கானல், மர்மங்கள் நிறைந்த பகுதிகள்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏாளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது.
இதனால் வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலாப் பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். மோயர் பாய்ன்ட்டில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பித்தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட வியூ பாய்ன்ட் மற்றும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள் என இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
வனத்துறை சார்பில் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். வனத்துறை வாகனத்தில் செல்ல ஒரு நபருக்கு ரூ.100, சொந்த வானங்களில் பயணிக்க காருக்கு ரூ.200, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றனர்.
மதிகெட்டான் சோலை : பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் மூலிகைகள் நிறைந்துள்ள மிக முக்கியமான இடம் மதிகெட்டான் சோலை. இந்த இடத்தை பல மர்மங்கள் நிறைந்த காடு என்றுகூட சொல்லலாம்.
115 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இன்று வரை இந்த காட்டில் அப்படி என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. தடையை மீறி உள்ளே நுழைந்து வழி தெரியாமல் சென்ற பலர் உயிரிழந்துள்ளனர்.
இங்குள்ள மூலிகைகள் மதியை மயக்கும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ 250 தாவர வகைகள் உள்ளன. அதில் 42 வகை தாவரங்கள் சிறந்த மருத்துவக் குணங்களை கொண்டவை. குறிப்பாக செலட்ரஸ், அழுகண்ணி, காட்டு செண்பகம், கம்பளி வெட்டி, சோலை அரளி போன்ற 5 வகை அரிய தாவரங்கள் இப்பகுதியில் உள்ளன.
இந்த வனப்பகுதியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ள சோலை மரங்கள் நிறைந்து இருப்பதால், எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரியும் அதிசயம் காண்போரை வசீகரிக்கின்றது.
உயிருள்ள நீர்த்தேக்கம் : இந்த வனத்தில் தரைப்பகுதியில் 6 அங்குலம் உயரத்துக்கு இலை சருகுகள் பரவி கிடக்கின்றன. இவை மழை நீரை அப்படியே சேகரித்து வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனால் இந்த வனப்பகுதியை உயிருள்ள ‘நீர்த்தேக்கம்’ என்று அழைக்கின்றனர்.
இவை பல நீர் நிலைகளுக்கு நீரை வழங்கும் மூலாதாரமாக உள்ளது. பல உயிரினங்களின் வாழிடமாகவும் இருக்கிறது. கொடைக்கானலுக்கு வருவோர் நிச்சயம் ஒரு முறை பேரிஜம் ஏரி பகுதிக்கு ஒரு முறை போய் வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *