அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இணைய சேவையை வழங்குகிறது. பல நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவுக்குள் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் ஏற்பட்ட தாமதம், ஸ்டார்லிங்க் சேவைக்கு தேவையான ஒப்புதிகளை பெறுவதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், அண்டை நாடான பூட்டானில் இன்று முதல் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவையில், வரம்பற்ற தரவுடன் 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் மற்றும் 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகம் கொண்ட மாதாந்திர திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதற்கான கட்டணம் இந்திய ரூபாயில் ரூ.4,167 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
