மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு.

அரசியல் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது.மன்மோகன் சிங், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 92வது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட பலர் அஞ்சலியளித்தனர். பின்னர், சீக்கிய மதத்தின் மரபின்படி, அவரது உடல் யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.மன்மோகன் சிங்கின் அஸ்தி குருத்வாரா மஜ்னு கா திலா சாஹிபுக்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு, அவரது உறவினர்கள் யமுனை நதியில் அஸ்தியை கரைத்தனர். இதற்குப் பிறகு, மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் மற்றும் மகள்கள் உபிந்தர், தாமன், அம்ருத் உள்ளிட்ட உறவினர்கள் குருத்வாராவில் சடங்குகளை நடத்தினர். குறிப்பாக, அவர்கள் ஷபாத் கீர்த்தனை (குரு கிரந்த் சாஹிப்) மற்றும் பாத் (குர்பானி) பாடல்களை பாடி பிரார்த்தனை செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *