சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை விஜய் இன்று(திங்கள்கிழமை) நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு முதல்முறையாக நடிகர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்துள்ளார்.இந்நிலையில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, penjal புயல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் அவர் மனு அளித்துள்ளார்.மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தவெக தலைவர் விஜய் ‘திருக்குறள்’ புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். பதிலுக்கு ஆளுநர் ‘பாரதியார் கவிதைகள்’ தொகுப்பை விஜய்-க்கு வழங்கியுள்ளார்.இந்த சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடனிருந்தனர்.கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாக கூறியதாக த. வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

