உலக ராபிட் செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தியா உலகம் சமூக வலைதளங்கழ் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி விளையாட்டு

இந்தியாவின் கொனேரு ஹம்பி உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியிலும் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற இந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் கொனேரு ஹம்பி, இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடி, 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற தொடரில் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் அவர் வெள்ளி பதக்கம் வென்றார்.சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியனாக வெற்றி பெற்றார். இதற்குப் பிறகு, தற்போது ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கொனேரு ஹம்பி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *