நாட்டிலேயே முதல்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாட்களில் மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள கல்வி நிலையங்களில் மாணவிகளின் வருகைப் பதிவு 73 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிறது. மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் மாணவிகள் விடுமுறை எடுப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாநில அரசு இத்தகைய தினங்களில் மாணவிகளின் நலன்கருதி கட்டாய விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொச்சின் பல்கலைக்கழகத்தில் இந்த அறிவிப்பு நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பிந்து தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.