இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டம் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். இந்த விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பட்டம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கி கௌரவிக்க உள்ளார்.
முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார். அவரிடம் இருந்து மகிழ்ச்சியுடன் பட்டத்தை பெற்றுக்கொண்ட இளையராஜா, முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து வாழ்த்தினார். இதன் பின்னர் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார் பிரதமர் மோடி. இசைத் துறையில் சேவை செய்ததற்காக இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.