தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் மருத்துவ இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளது

இந்தியா உயர்கல்வி கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி

தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதினர். கோவை மாவட்டத்தில் 14 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,736 பேர் இந்தத் தேர்வை எழுதினர். இத்தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *