சென்னையில் முதன்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவையை ஏசி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் ரயில் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகம். இந்த ரயிலில் மொத்தமாக 12 பெட்டிகளில் ஏசி வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏசி ரயில், அதிகாலை 5:45 மணிக்கு தாம்பரம் பணிமனையிலிருந்து புறப்பட்டு, 7 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்து, 8:45 மணிக்கு செங்கல்பட்டுக்கு சென்றடையும். மேலும், பிற்பகல் 3:45 மணிக்கும், இரவு 7:35 மணிக்கும் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு இந்த ஏசி ரயில் இயக்கப்படும். இந்த ரயில், வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படுகிறது.இந்த ஏசி ரயிலில் பயணிக்க சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டுக்கு வரை அதிகபட்ச கட்டணம் ரூ. 105 ஆகும். தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ரூ. 85 மற்றும் தாம்பரம் முதல் எழும்பூர் வரை ரூ. 60 கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

