ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இந்தியாவில் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர். இதில் பணம் இழக்கும் அபாயம் பெரிதும் இருப்பதால் ஆபத்து அதிகம் என உணரப்படுகிறது. பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெருகி வரும் அபாயம், தொடரும் தற்கொலைகளால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு யோசித்து வருவதாக கூறினார்.
நாடு முழுவதும் 322 மாவட்டங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கள் பெரிதும் விளையாடப்படுகின்றன. 65% பேர் இதனை தடை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பதால், இதனை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.