கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனமும் அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால் பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். இதேபோல் அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. மேலும் ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
நிறுவனத்தை மறுசீரமைக்க வேண்டிய தருணம். வேலை இழக்கும் ஊழியர்களுக்கு 6 மாத காலத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் 4 மாத காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி அறிவித்திருந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.