டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ (UPI) மூலம் செலுத்தும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவு கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இனி யுபிஐ மூலம் செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலனுக்காக மற்றும் தெரிவுப்பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், தேர்வாணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது ,ஒரு முறை பதிவு மற்றும் தேர்வு கட்டணங்களை தேர்வாளர்கள் எளிதாக செலுத்துவதற்காக, தேர்வாணையம் யுபிஐ மூலம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தேர்வாளர்கள் தங்கள் கட்டணங்களை எளிதாக செலுத்த முடியும். மேலும், தேர்வுகளுக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்காக, அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் மூலம், கடந்த பிப்ரவரி 14 முதல் தேர்வாளர்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.தெரிவுப்பணிகள் முடிந்த பிறகு, எந்த பதவிகளுக்கான தெரிவுப்பட்டியல் நியமன அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் ‘X’ தளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேனல்கள் மூலம் தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளது.

