ரயில் பயணிகள் தங்களது பயணத் தேதியை மாற்ற விரும்பினால், மாற்றும் புதிய வசதியை இந்திய ரயில்வே பயணிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்து, உரிய ரத்துக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே புதிய பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம். மேலும் 48 முதல் 12 மணி நேரம் முன்பு டிக்கெட் ரத்து செய்தால், 25 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல், உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளின் பயணத் தேதியை பயணிகள் எவ்விதக் கட்டணமும் இன்றி ஆன்லைன் மூலமாக மாற்றிக்கொள்ளலாம்.புதிய பயணத் தேதிக்கு இருக்கை கிடைப்பதைப் பொறுத்தே உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்படும்.ஒருவேளை புதிய பயணச்சீட்டின் விலை அதிகமாக இருந்தால், அந்த தொகையை பயணிகள் செலுத்த வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

