இந்தியாவின் மிக சக்திவாய்ந்த போர் விமானமான ரஃபேல் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.பிரான்சின் விண்வெளி நிறுவனம் டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானம் இந்திய ராணுவப்படையில் உள்ளது. அம்பாலா தளத்திலிருந்து ரஃபேல் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, ராணுவத்தினர் மரியாதை அணிவகுப்பு வழங்கினர். ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தில், அவர் இமயமலை, பிரம்மபுத்ரா நதி, மற்றும் தேஸ்பூர் பள்ளத்தாக்கு மீது பறந்தார்.இதற்கு முன் முன்னாள் ஜனாதிபதிகள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பறந்திருந்தனர். இதன் மூலம் திரௌபதி முர்மு, போர் விமானத்தில் பறந்த மூன்றாவது இந்திய ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

