நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் ரி-சென்சார் நாளை சென்னையில் நடைபெறுகிறது

அரசியல் இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

விஜய் – ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜன நாயகன்’. பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து படத்திற்கு தணிக்கை வழங்ககோரி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வழக்குகள் இறுதியில் வாபஸ் பெறப்பட்டன.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சென்னையில் ரீ-சென்சார் நடப்பதாக இருந்தது. ஆனால் அப்போது சென்சார் போர்டு உறுப்பினருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மறு தணிக்கை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் மறு தணிக்கை நாளை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த மறு தணிக்கையில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில், சான்றிதழ் பெறப்பட்டு விரைவில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *