மார்ச் 19ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த புட்ச் விலோர் ஆகியோர் கடந்த ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கலால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. இவர்கள் விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக உள்ளனர். 8 நாள் பயண திட்டத்துடன் விண்வெளி நிலையத்திற்கு சென்ற இருவரும் தற்போது வரை மீட்கப்படவில்லை. அவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பாதியில் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் பூமியில் இருந்து புறமாகும். அந்த டிராகன், மார்ச் 19-ம் தேதி விண்கலன் மூலம் அங்கிருந்து புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

