இந்தியாவில், தென்னிந்தியப் பகுதிகளில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். கேரளத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை இதுவாகும். ஆணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பண்டிகை ஓணமாகும். விஷ்னு வாமன அவதாரம் அவதரித்த தினம் என்றும் வரலாறு கூறுகிறது. அன்றைய கேரள நிலப்பரப்பை ஆண்ட மன்னன் மாவேலியை ஆட்சியைக் கண்டு பொறாமைக் கொண்ட கடவுள் மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்டதாகவும், அதற்கு மன்னன் மாவேலி இசைந்ததாகவும் புராணம் கூறுகிறது.
முதல் அடியில் கடவுள் நிலத்தை அளந்ததாகவும், இரண்டாம் அடியில் வானத்தை அளந்தப் பின் மூன்றாம் அடியில் மன்னன் மாவேலி தலையில் வைத்து அழுத்தியதும் மன்னன் கடவுளிடம் ஓர் கோரிக்கை வைத்தார். அதாவது வருடந்தோறும் ஒரு நாள் வந்து தன் மக்களை காண வேண்டும் என்பது. கடவுள் அதனை ஏற்றுக் கொண்டு, மன்னன் மாவேலி கேரளா பிரவேசிக்கும் தினத்தை ஓணம் என்று கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கேரளா மட்டும் இல்லாமல் இந்தியாவில் பெரும் பகுதிகளில் கொண்டாடப்படகிறது. திருவோணம் பத்து தினங்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் அத்தம் தொடங்கி சித்திரா, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம் என்று பத்தாம் நாள் திருவோணம் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தோறும் மக்கள் பூக்கோலம் இட்டு மன்னனை வரவேற்ப்பர். ஓணம் தினத்தன்று சாத்யா என்னும் 64 வகை உணவை பறிமாறுவர்.
தமிழகத்திலும் ஓணம் பண்டிகை அனைத்து முக்கிய நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது. சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஓணம் தினத்தன்று உள்ளூர் விடுமுறையும் விடப்படும்.
