மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை ரூ.6,000 இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 2 காலாண்டுகளாக 7.5 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
இந்த ஆண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பது மகிழ்ச்சி. அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்துடன் பட்ஜெட் தொடரில் செயல்படுவார்கள் என நம்புகிறேன்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
அயோத்தியில் ராமர் கோயில் அமைத்தது பெருமைக்குரியது – திரௌபதி முர்மு.
அயோத்தி அறிவிப்பை கைத்தட்டி வரவேற்ற பாஜக உறுப்பினர்கள்.

