நடிகர் விஜய் நடித்த லியோ வெளியாகி ஒரே நாளில் 140 கோடி வசூல் செய்து சாதனை; ஷாரூக் கான் ஜவான் சாதனை முறியடிப்பு

இசை இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. அந்த மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், ‘லியோ’ படம் ஒரு தரமான சம்பவம் என தெரிவித்தனர்.

அதனைதொடர்ந்து தமிழ்நாட்டில் ‘லியோ’ திரைப்படம் காலை 9 மணிக்கு வெளியானது. பல இடங்களில் டிஜே, பேப்பர், பட்டாசுகள் என வெவ்வேறு விதமாக ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் அபிஷேகம், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் சேலை, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. புதுக்கோட்டையில் ‘லியோ’ வெளியான திரையரங்கு ஒன்றில் ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டனர்.
ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்நிலையில், உலகளவில் 6000 திரைகளில் வெளியான ‘லியோ’திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2023-ல் உலக அளவில் அதிக வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் எனும் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *