பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியீடு

இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் பாடல்களும், ட்ரெய்லரும் நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன. இப்படத்தினை மெட்ராஸ் டாக்கிஸ் சார்பாக மணிரத்னம் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் பல முக்கிய ஹுரோக்கள் இதில் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலன், நந்தினி, அருன்மொழிவர்மன், வந்தியத்தேவன் போன்ற சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியிப்பட்டன. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் மீதமுள்ள பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகி யூ ட்யூப்பில் சில மணி நேரங்களிலேயே பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றது.
விழா மேடையில் பேசிய ரஜினி காந்த், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு ரஜினி பொறுத்தமாக இருப்பார் என அன்றுக் கூறியதை நினைவுக்கூர்ந்தார். ஏ.ஆர். ரகுமான் இவ்விழாவைப் பற்றி “இருபெரும் ஜாம்பவான்கள் மூலம் இப்படத்தின் ஆரம்பம் இனிதே துவங்கியிருக்கிறது” என ட்வீட் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.