மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாக உருவாகிறது, ‘என்டிஆர் 30’. இதில் பிராட் மின்னிச் என்ற புகழ்பெற்ற விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் இணைந்துள்ளார். ஹாலிவுட்டில் வெற்றிகரமான படங்களில் பணியாற்றியுள்ள அவர் பணியாற்றும் முதல் இந்தியப் படம் இது. யுவசுதா ஆர்ட்ஸ் தயாரிக்க, என்டிஆர் ஆர்ட்சுக்காக நந்தமூரி கல்யாண் ராம் வழங்கும் இப்படத்தின் மூலமாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம்சரன் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கார் வென்றது என்பது குறிப்படத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.