உலகக்கோப்பை செஸ் போட்டியின் இன்று நடைபெற்ற 2 ஆவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.
அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டி 2 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. நேற்று நடந்த முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில், 2 ஆவது சுற்றும் இன்று டிராவில் நிறைவு பெற்றது.
2 சுற்றுகளும் டிராவில் முடிந்ததால் ஆட்டம் டை பிரேக்கருக்கு நகன்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தின் முடிவில் உலக செஸ் சாம்பியன் யார் என்பது முடிவாகி விடும். மொத்தம் 30 நகர்வுகளை ஏற்படுத்தி கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் முடிவில் ஆட்டத்தை டிரா செய்தனர்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 91 லட்சமும், ஃபைனலில் தோல்வி அடைபவருக்கு ரூ. 66 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
 
	

 
						 
						