தேமுதிக கட்சியின் புது பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு; சென்னையில் இன்று நடந்த பொதுக் குழுவில் முடிவு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தேமுதிகவின் பொருளாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் பொது செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய விஜயகாந்துக்கே முழு அதிகாரம் என தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக தொண்டர்கள் ஒற்றுமையுடனும், முழு வேகத்துடனும் பணியாற்றிட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *