அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்தார் விருந்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இஃப்தார் விருந்தில் அவர் கூறியதாவது, முஸ்லிம்களின் நலனுக்கான நடவடிக்கைகளில் என் நிர்வாகம் எப்போதும் அவர்களுடன் இணைந்து செயல்படும். மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து செயல்படுவேன் என கூறினார். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் க்கு முஸ்லிம் சமூகத்தினர் பெரும் ஆதரவினை வழங்கினர். நான் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல சவால்கள் இருந்தாலும், அவர்களின் வாழ்வில் அமைதியை உருவாக்க வேண்டும் என்ற உறுதியில் நான் இருக்கிறேன். பைடன் நிர்வாகம் செய்ய முடியாதவற்றை நான் செய்யத் தொடங்கியுள்ளேன். தற்போது அனைவருக்கும் தேவையானது அமைதியே என அவர் கூறினார். 2018-ம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில், முஸ்லிம்களுடன் டிரம்ப் முதன்முறையாக இப்தார் விருந்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
