ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் 22ஆம் தேதி இந்தியா வருகை; குடியரசு தின விழாவில் பங்கேற்பார் என தகவல்

அரசியல் இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வட அமெரிக்கா வரும் நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியா வருகிறார். ஐ.நா பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், 5 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை முதல் வரும் 26ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அவர் மும்பை , ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். மேலும் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, பலதரப்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
குறிப்பாக இந்த ஆலோசனையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளையும் உறுப்பினராக சேர்ப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் ஐ.நா – இந்தியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக, பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *